தபால் நிலையத்தின் இந்த திட்டத்தில் மாதம் 2000 செலுத்தினால் 1.42 லட்சம் லாபம்

தபால் நிலையத்தின் இந்த திட்டத்தில் மாதம் 2000 செலுத்தினால் 1.42 லட்சம் லாபம்

சாமான்ய மற்றும் நடுத்தர மக்களுக்காக தபால் நிலையம் வழங்கும் தொடர் வைப்பு நிதி எனப்படும் ஆர்.டி திட்டம் பாதுகாப்பான முதலீட்டிற்கு சிறந்த வாய்ப்பாகும். இத்திட்டத்தில் மாதம் ரூ.2000 வீதம் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்பவர்களுக்கு, முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.1,42,732 கிடைக்கிறது. மத்திய அரசின் நேரடிப் பாதுகாப்பில் உள்ளதால் இம்முதலீட்டிற்கு நூறு சதவீத உத்தரவாதம் உண்டு.

கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுவதால் உங்கள் பணம் விரைவாக வளரும் அம்சம் இதில் உள்ளது. கணக்கு தொடங்கி ஓராண்டு முடிந்த பிறகு சேமிப்புத் தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறும் வசதியும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்தே சேமிப்பைத் தொடங்கலாம் என்பதால், சிறு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *