விஜய் ஆதரவாளர்களுக்கு எதிராக ஜூலி பாய்ச்சல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
March 16, 2026

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த விமர்சனத்திற்காக சமூக வலைதளங்களில் திட்டமிட்ட அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விஜய்யின் கருத்தை எதிர்த்ததால், தன்னை குறிவைத்து ஆபாசமான மற்றும் பொய்யான வீடியோக்கள் வெளியிடப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டிவிகே நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் உள்ளிட்ட எட்டு பேர் மீது புகார் அளித்துள்ள ஜூலி, அவர்கள் தன் மீது சிறுநீரக மோசடி போன்ற பொய்ப் பழிகளை சுமத்துவதாகக் கூறியுள்ளார். பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.