தேர்தல் நேரத்தில் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு

தேர்தல் நேரத்தில் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினரின் சோதனையில் சிக்கினால் அந்தப் பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவம் அல்லது கல்வி போன்ற அவசர தேவைகளுக்காக அதிக பணம் கொண்டு செல்பவர்கள், அதற்கான வங்கி ஆவணங்கள் அல்லது மருத்துவமனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். முறையான ஆதாரங்கள் இருந்தால் எவ்வளவு தொகையையும் அச்சமின்றி கொண்டு செல்லலாம். ஆனால் ஆவணங்கள் இல்லையென்றால் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், 10 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரித்துறை விசாரணை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *