எம்ஜிஆருக்கு அமைச்சர் பதவி மறுப்பு முதல் ஊழல் புகார் வரை, திமுக உடைந்த பின்னணி இதுதான்!

எம்ஜிஆருக்கு அமைச்சர் பதவி மறுப்பு முதல் ஊழல் புகார் வரை, திமுக உடைந்த பின்னணி இதுதான்!

1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுகவில் பிளவு ஏற்பட்டது. எம்ஜிஆர் தனக்கு ‘மருத்துவத்துறை அமைச்சர்’ பதவி கேட்டபோது, சட்ட சிக்கல்களைக் காரணம் காட்டி கருணாநிதி அதை மறுத்தார். பதிலுக்கு சிறிய அளவிலான பதவியே வழங்கப்பட்டது. அதேசமயம், தன் மகன் மு.க. முத்துவை சினிமாவில் முன்னிறுத்தி எம்ஜிஆரை ஓரங்கட்ட கருணாநிதி முயன்றதாகக் கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சி நிர்வாகிகளின் சொத்துக் கணக்கைக் கேட்டதற்காகவும், ஊழலை எதிர்த்ததற்காகவும் 1972-ல் எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது ஒழுங்கு நடவடிக்கை என கருணாநிதி கூறினாலும், மக்கள் எம்ஜிஆர் பக்கமே நின்றனர். அண்ணாவின் கொள்கையிலிருந்து திமுக விலகிவிட்டதாக எழுந்த விமர்சனம், இறுதியில் எம்ஜிஆரின் புதிய அரசியல் எழுச்சிக்கும் திமுகவின் பின்னடைவுக்கும் வழிவகுத்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *