கிரெடிட் கார்டு மறைமுகக் கட்டணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது ஆர்.பி.ஐ. புதிய அதிரடி

கிரெடிட் கார்டு மறைமுகக் கட்டணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது ஆர்.பி.ஐ. புதிய அதிரடி

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை வட்டி வேட்டையிலிருந்து பாதுகாக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல் மறைமுக வட்டி மற்றும் அபராதங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தாமதக் கட்டணத்தின் மீது மீண்டும் வட்டி வசூலிக்கும் கூட்டு வட்டி முறை இனி செல்லாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, கார்டு வரம்பை உயர்த்த வாடிக்கையாளரின் நேரடி அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்வோர் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். இந்த மாற்றங்கள் வங்கிகளின் தன்னிச்சையான அபராதங்களைத் தடுத்து, நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *