தமிழகத்தில் மார்ச் 22 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்
March 16, 2026

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெயிலின் தாக்கம் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.