பபானிபூரில் மம்தாவை எதிர்க்கும் சுவேந்து அதிகாரி என பாஜக அதிரடி வேட்பாளர் பட்டியல்

பபானிபூரில் மம்தாவை எதிர்க்கும் சுவேந்து அதிகாரி என பாஜக அதிரடி வேட்பாளர் பட்டியல்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் 144 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பபானிபூரில் அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த பட்டியலில் சுவேந்து அதிகாரி, திலீப் கோஷ் மற்றும் ஸ்வபன் தாஸ்குப்தா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். அசன்சோல் தெற்கில் அக்னிமித்ரா பால் போட்டியிடுகிறார். 10 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் மம்தாவை நந்திகிராமில் தோற்கடித்த சுவேந்து அதிகாரி மீண்டும் அவரை எதிர்த்து களமிறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *