தேர்தல் நடத்தை விதிகளால் தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிரடி சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம்
March 16, 2026

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கிருஷ்ணகிரி, திருமங்கலம் மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரியில் கார் சோதனையின் போது ரூ. 1,08,400 பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் திருமங்கலத்தில் ஒரு லட்ச ரூபாயும், வந்தவாசி அருகே ஆட்டு வியாபாரியிடம் இருந்து ரூ. 73,030-யும் அதிகாரிகள் கைப்பற்றினர். முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்தத் தொகைகள் அனைத்தும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.