வேட்பாளர் தட்டுப்பாடும் உட்கட்சி மோதலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடும் திணறல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது. வலுவான கூட்டணிக் கட்சிகள் அமையாதது ஒருபுறம் இருக்க, கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி மற்றும் வேட்பாளர் தேர்விலுள்ள இழுபறி விஜய்யை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிகிறது. கூட்டணி குறித்த தெளிவான முடிவெடுக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறி வருகிறது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சுமார் 150 இடங்களுக்கு மட்டுமே ஓரளவிற்கு செல்வாக்குள்ள வேட்பாளர்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு தகுதியான நபர்கள் இல்லாததால் வேட்பாளர் தேர்வில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. மேலும், சீட் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாகக் கூறி விசுவாசமான தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதால், விஜய்யின் தேர்தல் வியூகம் கேள்விக்குறியாகியுள்ளது.