பாகிஸ்தானில் அரசு கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் எட்டு பெண்கள் பரிதாப பலி
March 16, 2026

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹீம் யார் கான் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி மையத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 8 பெண்கள் உயிரிழந்தனர். பெனசீர் வருமான ஆதரவு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற ஏராளமான பெண்கள் அங்கு திரண்டிருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட மீட்புப் படையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பழுதடைந்த கட்டிடத்தில் அரசு மையத்தை இயக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் இரங்கல் தெரிவித்ததுடன் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.