இந்தியாவையே அதிரவைக்கும் டுகாட்டியின் புதிய டெஸ்மோ450 எம்எக்ஸ் பைக் விற்பனைக்கு வந்தது
March 16, 2026

இத்தாலியின் புகழ்பெற்ற டுகாட்டி நிறுவனம் தனது முதல் மோட்டோகிராஸ் மாடலான ‘Desmo450 MX’ பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 449.6 சிசி எஞ்சின் கொண்ட இந்த பைக் பந்தயக் களங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் 104.8 கிலோ எடை கொண்ட இது சிறந்த செயல்திறனை வழங்கும்.
இந்த சொகுசு பைக்கின் விலை 17.24 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களில் மட்டுமே இது கிடைக்கும். ஆஃப்-ரோடு சாகசப் பயணங்களை விரும்புபவர்களுக்காகவே டுகாட்டி இந்த நவீன ரக பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.