தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கோவையில் அரசு விளம்பரங்கள் அதிரடி அகற்றம்
March 16, 2026

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரி பவன் குமார் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் விளம்பரம் செய்ய முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.