தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணியா நடிகர் விஜய்யின் அதிரடி நிபந்தனை என்ன

தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணியா நடிகர் விஜய்யின் அதிரடி நிபந்தனை என்ன

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக, பாஜக தரப்பிலிருந்து வந்த கூட்டணி அழைப்பிற்கு விஜய் தற்போதைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பவன் கல்யாண் மூலமாக நடந்த பேச்சுவார்த்தையில், தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்தால் அது தனது கட்சியின் மதச்சார்பற்ற பிம்பத்தைப் பாதிக்கும் என அவர் கறாராகக் கூறியுள்ளார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆதரவு தரத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இப்போதே கூட்டணி அமைக்க வேண்டுமானால், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற அதிரடி நிபந்தனையை விஜய் விதித்துள்ளதாகத் தெரிகிறது. தொழிலதிபர் அதானி இந்த விவகாரத்தில் தூதுவராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில், விஜய்யின் இந்த நிபந்தனைகள் குறித்து டெல்லி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழகத் தேர்தல் களத்தில் இந்த ரகசியப் பேச்சுவார்த்தை புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *