தமிழக தேர்தல் 2026 உங்கள் தொகுதியின் கடந்த கால வெற்றி தோல்வி நிலவரம் இதோ

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 2021 தேர்தலின் முடிவுகள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சென்னை மாவட்டத்திலுள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முழுமையாக வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது. அதே சமயம் சேலம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் அதிமுக தனது பலத்தை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடந்த முறை பெரிய வெற்றியைப் பதிவு செய்தனர். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி தனது செல்வாக்கை நிலைநாட்டினார். கோயம்புத்தூர் தெற்கில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்று அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த முக்கிய மாவட்டங்களின் தேர்தல் வரலாறு தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.