தேர்தல் அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் மேற்கு வங்கத்தில் நள்ளிரவில் அதிரடியாக மாற்றப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள்
March 16, 2026

மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் நேரடி மேற்பார்வையில் மாநிலத்தின் முக்கிய துறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாநில தலைமைச் செயலாளராக இருந்த நந்தினி சக்ரவர்த்தி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துஷய்ந்த் நரிலா புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் உள்துறை செயலாளர் ஜெகதீஷ் பிரசாத் மீனா மாற்றப்பட்டு சங்கமித்ரா கோஷ் அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.