துணை முதல்வர் பதவி கிடையாது விஜய்யின் இலக்கு முதல்வர் நாற்காலி மட்டுமே என செங்கோட்டையன் அதிரடி

துணை முதல்வர் பதவி கிடையாது விஜய்யின் இலக்கு முதல்வர் நாற்காலி மட்டுமே என செங்கோட்டையன் அதிரடி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே அரசியலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். விஜய்யின் கூட்டங்களுக்கு கூடும் மக்கள் கூட்டம் மாநிலத்தில் பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதை உறுதிப்படுத்துவதாக அவர் புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்த அவர், விஜய் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற தகவலை திட்டவட்டமாக மறுத்தார். விஜய்யின் ஒரே இலக்கு முதல்வர் பதவி மட்டுமே என்றும், 234 தொகுதிகளிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் அவரிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *