ஆஸ்கர் வரலாற்றில் ஒளிப்பதிவு பிரிவில் முதன்முறையாக விருது வென்று சாதனை படைத்த பெண் கலைஞர்
March 16, 2026

லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சுமார் நூறு ஆண்டுகால வரலாற்றை ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் மாற்றி எழுதியுள்ளார். ‘சின்னர்ஸ்’ திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த பிரிவில் அவர் நிகழ்த்திய சாதனை ஹாலிவுட்டில் ஒரு புதிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.
விருது மேடையில் கண்ணீர் மல்க பேசிய அர்க்காபாவ், தன் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கூக்ளருக்கு நன்றி தெரிவித்தார். திரையுலகின் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் இந்த வெற்றி, எதிர்கால பெண் கலைஞர்களுக்கு ஒரு சிறந்த ஊக்க மருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.