சென்னை ஏ டிவிஷன் வாலிபால் லீக் போட்டியில் வருமான வரித்துறை அணி அபார வெற்றி
March 16, 2026

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் லீக் போட்டிகள் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கின. முதல் லீக் ஆட்டத்தில் வருமான வரித்துறை மற்றும் டிஜி வைஷ்ணவா கல்லூரி அணிகள் மோதின. இதில் வருமான வரித்துறை அணி 26-24, 28-26, 25-22 என்ற கணக்கில் டிஜி வைஷ்ணவா கல்லூரியை வீழ்த்தி வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
தொடக்க விழாவில் வருமான வரித்துறை ஆணையர் ஜே.பிரேமானந்த் மற்றும் சுங்கத்துறை கூடுதல் ஆணையர் என்.சங்கரநாராயணன் உள்ளிட்டோர் சிறப்ப விருந்தினர்களாகப் பங்கேற்றனர். ஆட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்த வருமான வரித்துறை வீரர் முத்துசாமிக்கு ஏ.கே.சித்திரைப்பாண்டியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.