திருமண மேடையில் ரவுடிக்கு விழுந்த விலங்கு காதலியை கலங்க வைத்த போலீஸ் அதிரடி
March 16, 2026

போபாலைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆகாஷ் நீல்கந்த் மீது கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட முப்பத்தி ஒன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவருக்கும் அவரது நீண்ட கால காதலி சீமாவிற்கும் நடைபெறவிருந்த திருமண விழாவிற்குள் புகுந்த போலீஸார், மணக்கோலத்தில் இருந்த ஆகாஷை அதிரடியாக கைது செய்தனர்.
தனது வாழ்க்கை பாழாகிவிடும் என்று கதறிய மணமகள் சீமா, திருமண சடங்குகள் முடியும் வரை காத்திருக்குமாறு போலீஸாரின் காலில் விழுந்து கெஞ்சினார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த போலீஸார், சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த ஆகாஷை உடனடியாக அழைத்துச் சென்றனர். இதனால் அந்தத் திருமணம் பாதியிலேயே நின்று போனது.