கட்டாக் அரசு மருத்துவமனையில் நேர்ந்த பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் துயர மரணம்

கட்டாக் அரசு மருத்துவமனையில் நேர்ந்த பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் துயர மரணம்

ஒடிசாவின் கட்டாக் எஸ்சிபி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த கோர விபத்தில் சிகிச்சையில் இருந்த 10 நோயாளிகள் உயிரிழந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட 11 மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு மற்ற நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நிலைமையை ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய தீயணைப்புத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *