சென்னையில் அதிரடி என்கவுன்டர் பிரபல ரவுடி தொப்பை கணேசன் சுட்டுக்கொலை
March 16, 2026

சென்னை மாதவரம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த காவல் துறை என்கவுன்டரில் பிரபல ரவுடி தொப்பை கணேசன் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் ஒரு வீட்டின் உரிமையாளர்களை கட்டிப்போட்டு 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் இவர் முக்கிய மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த கணேசனை பிடிக்க முயன்றபோது அவர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் தற்காப்பிற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே பல கொலை வழக்குகளில் தொடர்புடைய இவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.