காதல் ஜோடியை கிணற்றில் வீசி கொன்ற தந்தை குஜராத்தில் பரபரப்பு

காதல் ஜோடியை கிணற்றில் வீசி கொன்ற தந்தை குஜராத்தில் பரபரப்பு

குஜராத்தின் கட்ச் பகுதியில் காதல் விவகாரத்தால் தனது 19 வயது மகள் மற்றும் அவரது காதலனை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சமாதானம் பேசுவதாக அழைத்துச் சென்று இந்த கொடூரத்தை நிகழ்த்திய அவர், உடல்களை 100 அடி ஆழமுள்ள கிணற்றில் வீசி மறைத்துள்ளார். மாயமானதாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் தீவிர விசாரணையில் கைது செய்தனர்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் கிணற்றிலிருந்து உடல்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆணவக் கொலையால் விளைந்த இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *