காதலியின் உடலில் எச்ஐவி இரத்தத்தை ஊசி மூலம் செலுத்தி இளைஞர் செய்த கொடூரமான பழிவாங்கல்

காதலியின் உடலில் எச்ஐவி இரத்தத்தை ஊசி மூலம் செலுத்தி இளைஞர் செய்த கொடூரமான பழிவாங்கல்

ஹைதராபாத்தில் திருமணம் ரத்து செய்யப்பட்ட ஆத்திரத்தில் காதலியின் உடலில் எச்ஐவி பாதித்த இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞருக்கு எச்ஐவி இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டதால் இரு குடும்பத்தினரும் கடந்த செப்டம்பரில் திருமணத்தை நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர் கடந்த மார்ச் 11 அன்று இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்று இக்கொடூரச் செயலைச் செய்துள்ளார்.

தனது உடலில் இருந்து எடுத்த பாதிக்கப்பட்ட இரத்தத்தை வலுக்கட்டாயமாக பெண்ணின் உடலில் செலுத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *