மண்ணுக்குள் மறைந்திருந்த அதிசயம் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மாண்ட சிலை

மண்ணுக்குள் மறைந்திருந்த அதிசயம் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மாண்ட சிலை

மத்திய எகிப்தின் எல் அஷ்முனின் பகுதியில் நைல் நதிக்கரையில் மாமன்னர் இரண்டாம் ராமசேஸின் 12 அடி உயர பிரம்மாண்ட சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1930 ஆம் ஆண்டு ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட சிலையின் கீழ் பகுதியுடன், தற்போது கிடைத்துள்ள மேல் பகுதி கச்சிதமாகப் பொருந்துகிறது. இது தொல்பொருள் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

சுண்ணாம்புக்கல்லால் செதுக்கப்பட்ட இந்த சிலையில் மன்னர் இரட்டை மகுடம் அணிந்து காட்சியளிக்கிறார். சிலையின் பின்புறம் உள்ள கல்வெட்டுகள் அந்த ஆட்சியாளரின் பெயரையும் சிறப்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளன. பண்டைய எகிப்திய மற்றும் கிரேக்க கலாச்சாரத்தின் எச்சங்களை சுமந்து நிற்கும் இந்த கண்டுபிடிப்பு வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *