உலகக்கோப்பை பைனல் முடிந்த கையோடு நியூசிலாந்துக்கு நேர்ந்த அவமானம் வெறும் 91 ரன்களில் சுருண்டு படுதோல்வி
March 15, 2026

டி20 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்கு தென்னாப்பிரிக்கா தற்போது தரமான பதிலடி கொடுத்துள்ளது. புதிய வேகப்பந்துவீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 15 ஓவர்களிலேயே 91 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜெரால்ட் கோட்ஸி மற்றும் அறிமுக வீரர் மோகோயெனா ஆகியோரின் வேகத்தில் கிவிஸ் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்கா அணியும் ரன் எடுக்க திணறியது. இருப்பினும், அறிமுக வீரர் கோனர் எஸ்டர்ஹைசனின் நிதானமான 45 ரன்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. அதே சமயம் இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயமடைந்தது பின்னடைவாக கருதப்படுகிறது.