தூத்துக்குடி மாணவி படுகொலை விவகாரம் போராட்டத்தில் குதித்த தேசிய ஜனநாயக கூட்டணி

தூத்துக்குடி மாணவி படுகொலை விவகாரம் போராட்டத்தில் குதித்த தேசிய ஜனநாயக கூட்டணி

தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக இந்த போராட்டத்தில் ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த விவகாரத்தில் முறையான விசாரணை கோரி திருச்செந்தூரில் நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதி மக்கள் கனிமொழி எம்பி-யை முற்றுகையிட்ட நிலையில், தற்போது அரசியல் கட்சிகளின் நேரடி போராட்டங்கள் அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. தனிப்படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *