உதவி அறுவை சிகிச்சை நிபுணர் நியமனத்தில் முறைகேடு புகாரை கிளப்பும் அண்ணாமலை

தமிழகத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 1,110 ஆக இருந்த காலிப்பணியிடங்கள் 320 ஆகக் குறைக்கப்பட்டதாகவும், தகுதியானவர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக தொலைபேசி மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இளம் மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு உடனடியாக உண்மையான காலியிடங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதில் தலையிட்டு, முறையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும், தகுதியான மருத்துவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.