பாஜக கூட்டணியில் இணைந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என திருமாவளவன் கடும் எச்சரிக்கை
March 15, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய நடிகர் விஜய்க்கு 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி மேலிடத்தின் அழுத்தத்தால் விஜய் இந்த முடிவுக்குச் சம்மதிக்கக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த சூழல் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், பாஜகவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தால் நண்பர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனக் கூறியுள்ளார். மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை நயவஞ்சகமாக வளைக்கும் பாஜகவின் உத்தி தமிழகத்தில் எடுபடாது என்றும், விஜய் தனது எதிர்காலத்தைச் சிதைத்துக் கொள்ள மாட்டார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.