தமிழகத்தின் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி
March 15, 2026

தமிழகத்தில் உள்ள திண்டிவனம் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட 66 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 முதல் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களுக்கு 40 ரூபாய் வரையிலும் கனரக வாகனங்களுக்கு 200 ரூபாய் வரையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.
மாதாந்திர பாஸ் கட்டணம் 350 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ள நிலையில் பாஸ்டேக் கட்டணமும் உயர்கிறது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள சூழலில் இந்த கூடுதல் கட்டண உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.