காலை நேரத்தில் டீ போட முயன்றபோது சிலிண்டர் வெடித்து சிதறிய வீடு இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் துயர மரணம்
March 15, 2026

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு விபத்தில் சஞ்சீவ்குமார் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவரது 4 வயது மகள் கிருத்திகா மற்றும் ஒன்றரை வயது மகன் தீரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சோனியா டீ போடுவதற்காக அடுப்பைப் பற்ற வைத்தபோது, கசிந்திருந்த வாயுவால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.