30 ஆண்டு கால மரபு உடைந்தது தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வெவ்வேறு தேதிகளில் தேர்தல்

30 ஆண்டு கால மரபு உடைந்தது தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வெவ்வேறு தேதிகளில் தேர்தல்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் ஏப்ரல் 9 அன்றும், தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரின் நகர்வு மற்றும் நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரளா மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 9-ல் தேர்தல் முடிந்து, அங்கிருந்து பாதுகாப்புப் படையினரை தமிழகத்திற்கு மாற்ற இந்த கால இடைவெளி உதவும். தேதிகள் மாறினாலும், வாக்கு எண்ணிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் மே 4-ஆம் தேதி ஒரே நாளில் நடைபெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *