ஆறு விரல் சர்ச்சையால் பரபரப்பு பிரதமர் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா

ஆறு விரல் சர்ச்சையால் பரபரப்பு பிரதமர் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் அவரது கையில் ஆறு விரல்கள் தெரிவதைக் கண்ட நெட்டிசன்கள் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று பதிவிட்டு வருகின்றனர். இதனால் நெதன்யாகு போரில் இறந்துவிட்டாரா என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. பிரதமர் நலமுடன் இருப்பதாகவும் அவர் இறந்துவிட்டதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. ஈரானின் புதிய தலைவருக்கு எச்சரிக்கை விடுத்த அந்த வீடியோவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இத்தகைய குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *