தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகிறது

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிடுவார். இதில் வாக்குப்பதிவு எத்தனை கட்டங்களாக நடைபெறும் மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதிகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெறும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு சவால்கள் மற்றும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் களம் இன்று முதல் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.