பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயம்புத்தூர் படைப்பிரிவு கமாண்டன்ட் கைது
March 15, 2026

கோவைப்புதூர் தமிழ்நாடு 4-வது காவல் பட்டாலியன் படைப்பிரிவில் கமாண்டன்டாக பணியாற்றிய செந்தில்குமார், அங்குள்ள பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, துறை ரீதியான விசாரணையில் அவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் பதவியில் இருந்த ஒரு அதிகாரியே இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.