தமிழக தேர்தல் களம் கடந்த 5 தேர்தல்களில் கட்சிகளின் வெற்றிப் பயணம் குறித்த அதிரடி புள்ளிவிவரங்கள்

தமிழக தேர்தல் களம் கடந்த 5 தேர்தல்களில் கட்சிகளின் வெற்றிப் பயணம் குறித்த அதிரடி புள்ளிவிவரங்கள்

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடந்த 2001 முதல் 2021 வரையிலான 5 தேர்தல்களின் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் திமுகவின் மைனாரிட்டி ஆட்சி, அதிமுகவின் தொடர் வெற்றி என பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை திமுக, அதிமுக கூட்டணிகளுடன் சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜய்யின் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதுவரை கூட்டணி ஆட்சி அமையாத தமிழகத்தில், இந்த முறை தொங்கு சட்டசபை உருவானால் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சியைப் பிடித்த நிலையில், வரும் தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *