கோவையில் பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை செய்த எஸ்பி செந்தில் குமார் அதிரடி கைது

கோவையில் பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை செய்த எஸ்பி செந்தில் குமார் அதிரடி கைது

கோவையில் 45 வயது பெண் காவலரை தனது அலுவலக அறையிலேயே பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்பி செந்தில் குமார் கைது செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கில் எஸ்பி-க்கு உடந்தையாக இருந்த பெண் உதவி ஆய்வாளர் புஷ்பா குமாரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டி மற்றும் உள்விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *