திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் கடும் அவதி

திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் கடும் அவதி

புதன்கிழமை காலை முதல் உலகளவில் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் சேவைகள் திடீரென முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆன்லைன் சேவைகளைக் கண்காணிக்கும் ‘டவுன் டிடெக்டர்’ தளத்தின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்கள் கணக்குகளை லாக்-இன் செய்ய முடியாமலும் ஃபீட் லோட் ஆகாதது குறித்தும் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக செயலியைத் திறக்கும்போது திரை வெள்ளையாக மாறுவது அல்லது பிழைச் செய்திகள் வருவது போன்ற சிக்கல்களைப் பயனர்கள் எதிர்கொள்கின்றனர்.

பயனர்களால் ஸ்டோரிகளைப் பதிவேற்றவோ அல்லது பார்க்கவோ முடியவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் சேவை இடையூறு குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. இருப்பினும் தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்து சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இந்தத் திடீர் தொழில்நுட்பக் கோளாறால் உலகம் முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் ஆன்லைன் தொடர்புகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *