தொடர் சோர்வு மற்றும் உடல் பலவீனம் உயிருக்கே ஆபத்தாக முடியும் எச்சரிக்கை

தொடர் சோர்வு மற்றும் உடல் பலவீனம் உயிருக்கே ஆபத்தாக முடியும் எச்சரிக்கை

தினசரி வேலையினால் ஏற்படும் சோர்வு என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு குறைவதால் பெரிய ஆபத்து ஏற்படக்கூடும். இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60-க்கும் குறைவாக இருந்தால் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை, இதனை மருத்துவர்கள் பிராடி கார்டியா என்கின்றனர். இதனால் மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற தீவிர அறிகுறிகள் தோன்ற வாய்ப்புள்ளது.

விளையாட்டு வீரர்களுக்குக் குறைவான இதயத் துடிப்பு இயல்பானது என்றாலும், சாதாரண மக்களுக்கு இது கவலைக்குரிய விஷயமாகும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஈசிஜி (ECG) பரிசோதனை செய்து நிபுணர்களை அணுகுவது அவசியம். சரியான நேரத்தில் கண்டறிந்தால் மருந்து அல்லது நவீன பேஸ்மேக்கர் கருவிகள் மூலம் இதயச் செயல்பாட்டைச் சீராக்கி ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்ய முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *