ஈரானை எதிர்கொள்ள அமெரிக்கா அதிரடி போர்க்கப்பல் திரிப்போலியை மேற்கு ஆசியாவில் நிலைநிறுத்தியது
March 15, 2026

ஈரானின் அச்சுறுத்தல்களை முறியடிக்க அமெரிக்க நிர்வாகம் மேற்கு ஆசியாவில் தனது ராணுவ பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் ஆபிரகாம் லிங்கன் மற்றும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு கப்பல்கள் உள்ள நிலையில், தற்போது 45 ஆயிரம் டன் எடையுள்ள அதிநவீன யுஎஸ்எஸ் திரிப்போலி போர்க்கப்பலையும் அமெரிக்கா அங்கு அனுப்பியுள்ளது.
இந்த அதிநவீன கப்பலில் எஃப்-35பி ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் சுமார் 2,500 கடற்படை வீரர்கள் உள்ளனர். கடல் மார்க்கமாக நேரடியாக நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த போர்க்கப்பல், இப்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ வலிமையை பன்மடங்கு அதிகரிக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.