மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் பிஎன்ஜி வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டர்களை ஒப்படைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் பிஎன்ஜி வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டர்களை ஒப்படைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு பெற்றுள்ள வீடுகளில் இனி உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களை வைத்திருக்க அனுமதியில்லை. சமையல் எரிவாயு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் விநியோகத்தை முறைப்படுத்தவும் பிஎன்ஜி வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் எரிவாயு இருப்பு குறைந்துள்ளதால் பிஎன்ஜி வாடிக்கையாளர்களுக்கு இனி எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சிலிண்டர் ரீஃபில் செய்யும் வசதி கிடைக்காது. இருப்பினும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்துவிட்டதையடுத்து வரும் மார்ச் 16 அல்லது 17-ஆம் தேதிகளில் இரண்டு எல்பிஜி கப்பல்கள் இந்தியாவிற்கு வரவுள்ளன. இந்த சரக்கு வந்தடைந்தவுடன் டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கி நிலைமை சீராகும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *