ஈரானின் கார்க் தீவு மீது மீண்டும் தாக்குதல் நடத்த டிரம்ப் எச்சரிக்கை
March 15, 2026

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இராணுவ இலக்குகள் ஏற்கனவே அழிக்கப்பட்டாலும், தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் கூறினார். இருப்பினும், தந்திரோபாய காரணங்களுக்காக எண்ணெய் உள்கட்டமைப்புகள் இதுவரை சேதப்படுத்தப்படவில்லை என்று டிரம்ப் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்தால் அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்த மோதலில் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் பதிலடி எச்சரிக்கையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் விலை கடும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.