உஜ்ஜைனியில் விபரீதம் பக்கத்து வீட்டு பெண்ணின் பெயரை மார்பில் பச்சைக் குத்திக்கொண்டு உள்ளாடைகளை திருடிய வாலிபர்
March 15, 2026

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி சிமன்கஞ்ச் பகுதியில் திருமணமான பெண் ஒருவரின் மீது கொண்ட ஒருதலைக் காதலால் அங்கித் மால்வியா என்ற வாலிபர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் காயப்போட்டிருக்கும் உள்ளாடைகளைத் திருடியதாகக் கூறப்படும் புகாரில், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் 25 வயதான அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் தனது மார்பில் அந்தப் பெண்ணின் பெயரை பெரிய அளவில் பச்சைக் குத்தியிருப்பது தெரியவந்தது. தனது விபரீத ஆசையாலேயே இந்தச் செயலைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.