சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் ஸ்டாலினின் அதிரடி 8 அறிவிப்புகள்

சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் ஸ்டாலினின் அதிரடி 8 அறிவிப்புகள்

ஈரான் – இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உணவகங்கள் மற்றும் கிளவுட் கிச்சன்கள் மின் அடுப்புகளுக்கு மாறினால் யூனிட்டிற்கு 2 ரூபாய் மின் கட்டண சலுகை வழங்கப்படும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் உபகரணங்கள் வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பியுள்ள முதல்வர், பொதுமக்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி, ஆவின் மூலம் தடையின்றி பால் கொள்முதல் செய்யவும், உழவர் சந்தைகளில் விவசாயிகள் தடையின்றி விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும், சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *