விமான பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் டிக்கெட் விலையை உயர்த்தியது ஆகாசா ஏர்
March 15, 2026

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, ஆகாசா ஏர் நிறுவனம் விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பயண தூரம் மற்றும் நேரத்தைப் பொறுத்து டிக்கெட் விலை ரூ.199 முதல் ரூ.1,300 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று நள்ளிரவுக்கு முன் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.425 வரையிலும், ஏர் இந்தியா நிறுவனம் சர்வதேச பயணங்களுக்கு ரூ.18,000 வரையிலும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டால் விமான நிறுவனங்கள் தொடர்ந்து விலையேற்றத்தை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.