ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த சீனா மற்றும் பிரான்ஸ்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த சீனா மற்றும் பிரான்ஸ்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதை மீண்டும் திறக்க போர்க்கப்பல்களை அனுப்புமாறு டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை சீனா மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. இந்த நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது என சீனா தெரிவித்துள்ளதுடன், பிரான்ஸ் தனது கப்பல்களை அனுப்பியதாக வெளியான தகவலையும் மறுத்துள்ளது.

இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜாரியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் குவைத் மற்றும் அமீரகத்தின் கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஈரான் எச்சரித்துள்ளது. உலக நாடுகளின் ஆதரவு கிடைக்காத நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன் சர்வதேச எரிபொருள் சந்தையும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *