வீட்டில் பிஎன்ஜி கனெக்ஷன் இருக்கிறதா அப்படியென்றால் இனி உங்களுக்கு சிலிண்டர் கிடைக்காது

வீட்டில் பிஎன்ஜி கனெக்ஷன் இருக்கிறதா அப்படியென்றால் இனி உங்களுக்கு சிலிண்டர் கிடைக்காது

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குழாய் வழி எரிவாயுவான பிஎன்ஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் இனி எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற சிலிண்டர் முன்பதிவு மற்றும் பதுக்கல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிஎன்ஜி வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய எல்பிஜி இணைப்புகளை உடனடியாக எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் புதிய ரீஃபில் சிலிண்டர்களை அவர்கள் பெற முடியாது. வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும் விநியோகத்தை சீராக்கவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *