கரூரில் ரயில் மோதி கல்லூரி பேருந்து விபத்து சிக்கிய 25 மாணவர்கள்
March 15, 2026

கரூர் வெள்ளியணை அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 25 மாணவர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார். தற்போது 20 மாணவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், ஒரு மாணவர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உயர்தர சிகிச்சை வசதிகளும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன.