நெல் சாகுபடி சாதனை அளவை எட்டியதால் கொள்முதல் இலக்கை இருமடங்காக உயர்த்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
March 14, 2026

தமிழகத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வை எட்டியுள்ளது. மேட்டூர் அணை திறப்பு மற்றும் சாதகமான வானிலை காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அரிசி கொள்முதல் இலக்கை 16 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தி நிர்ணயிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மொத்த கொள்முதல் 47.50 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு தனது கொள்முதல் இலக்கை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.