டி20 உலகக் கோப்பைக்கு பின் ஒலிம்பிக் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு என சூர்யகுமார் யாதவ் அதிரடி
March 14, 2026

CNBC-TV18-ன் 21-வது இந்திய பிசினஸ் லீடர் விருது விழாவில் ‘சிறந்த ஸ்போர்ட்ஸ் லீடர்’ விருதை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் இருந்து சூர்யகுமார் யாதவ் பெற்றார். அப்போது பேசிய அவர், டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டியில் கிரிக்கெட் அறிமுகமாகும் போது ஒலிம்பிக் தங்கம் வெல்வதே இந்திய அணியின் அடுத்த பெரிய இலக்கு என்று உறுதிபடத் தெரிவித்தார்.
கேப்டன்ஷிப் குறித்துப் பகிர்ந்த அவர், மைதானத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்றும், டிரெஸ்ஸிங் ரூமில் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிப்பது முக்கியம் என்றும் கூறினார். உலகக் கோப்பையை ஏந்தியது வாழ்வின் சிறந்த தருணம் எனக் குறிப்பிட்ட சூர்யகுமார், ஒலிம்பிக் சவாலுக்கான பயிற்சிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.