ஒரே நாளில் 50,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்த வோக்ஸ்வாகன் நிறுவனம்
March 14, 2026

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வாகன் தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் சுமார் 50,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய அதிரடி முடிவெடுத்துள்ளது. சீன நிறுவனங்களின் மலிவு விலை மின்சார வாகனப் போட்டியும் ஜெர்மனியில் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுமே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும். சுமார் 10 பில்லியன் யூரோக்களைச் சேமிக்க நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்த பணிநீக்க நடவடிக்கைகள் முதற்கட்டமாக ஐரோப்பாவில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள கிளைகளில் இதன் தாக்கம் குறித்து அந்நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.